Sunday, January 3, 2016

வாழைப்பழம்

எப்பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களாக இயற்கை மனித குலத்துக்கு அளித்துள்ள பழம் வாழைப்பழம், முக்கனிகளில் இதுவும் ஒன்று.
பத்துக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் உண்டு. ஆனாலும் எல்லாவற்றிற்கும்
கூறப்பட்டுள்ள பொதுவான குணம் ஒன்று எனினும் பல சிறப்புகளும் உண்டு. ருசியில் வேறுபாடு உண்டு. வாழைப் பழங்களில் செவ்வாழைக்கு மட்டுமே தனித்த பயன் உண்டு.


நமது இயற்கை விஞ்ஞானிகளான சித்தர்கள் மருத்துவ பயன் கருதி வீரியமூட்டி செவ்வாழயாக்கி இருக்கிறார்கள்.

பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கு வாழைப்பழங்கள் நிவாரணம் தருகின்றன. வைட்டமின் ஏ, பி, பி- 2, சி, உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது.


அடுக்கு வாழைப்பழம்
அக்கினி மானத்தை உண்டாக்கும். பித்தம் மிகுவதையும், மலம் தீய்வதையும்
வெளியாக்கும், தேகவனப்பை வளப்படுத்தும். 

பூவன் வாழைப் பழம்
உடலுக்கு வலுவுண்டாக்கும். இரத்த விருத்தி அதிகமாகும். இரவு உணவிற்குப் பிறகு ஒரு பழம் வீதம் தினமும் உட்கொள்ளலாம். செரிமானம் சுகமாகும்.

பச்சை வாழைப் பழம்

‘பச்சை நாடன்’ என்று இதற்கு வேறு பெயரும் உண்டு. உடல் சூட்டையும்,
பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.

பேயன் வாழைப் பழம்
பெரியவர்களுக்கு பித்தமும் உட்சூடும் அகலும், வாத ஆதிக்கம் குறையும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் கனிச் சூட்டிற்கு இது நல்ல மருந்தாகும். பழத்தை ஆமணக்கு எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்த நல்ல பயன் தரும்.

ரஸ்தாளி வாழைப் பழம்
அக்கினி மாந்தம் உண்டாகும். வாதத்தை உபரியாக்கும்.
 
மலை வாழைப் பழம்
மிகுந்த ருசியுடையது. இரத்த சோகை நிற்கும். உட்சூட்டை அதிகமாக்கும். இரத்த விருத்தியாகும், மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும்.
மலைப் பகுதியில் பயிராவதால் இதற்கு மலை வாழை என்று பெயர் உண்டாயிற்று.

திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சில மலையில் பயிராகும் மலைவாழைப் பழமே மிகுந்த சுவையுடன் கூடிய பயன் தரவல்லது.


செவ்வாழைப் பழம்
எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பலப்படும்.  நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.

பொதிகை மலைச்சாரல் சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.

வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை. சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம். எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண மருத்துவப் பயன் மிக்கது.

கருணைக் கிழங்கு

கிழங்குகளில் உடலிற்கு நன்மை பயக்கும் கிழங்கு என்பதால் கருணைமிகு இக்கிழங்கை கருணைக் கிழங்கு என நம் தமிழச்சித்தர்கள் அழைத்தனர்.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு,
 குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு"

அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.

தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும். 
தேவையானப்பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு பற்கள் - 10
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 முதல் 3 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கருணைக்கிழங்கை கழுவி, தோலை சீவி விட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் தோலை உரித்து வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில், கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
 

அதலைக்காய்

மூலிகையின் பெயர் – அதலைக்காய்
தாவரவியற் பெயர் – Momordica tuberosa
குடும்பம் – cucurbitaceae


செடி அமைப்பு 


அதலைச் செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சிலவேளைகளில் வயல் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர் தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரிகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன

நம் நாவில் பட்டவுடன் முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன. இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் அதலைக்காய். ஜீரணத்தை அதிகப்படுத்தி ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்

தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

அண்மைப் பகுதிக்கூறுகள் (100 கிராமில் பகுதி கிராம்)
கூறுஅதலைக்காய்பாகற்காய்
நீர்ச்சத்து – 84.30 – 83.20
நார்ச்சத்து – 6.42 – 1.70
மாச்சத்து – 12.60 – 10.60
புரதம் – 2.15 – 2.10
உணவு ஆற்றல் (கிலோ காலரி/100g) – 73.00 – 60.00

ஊட்டப்பொருள் (100 கிராமில் பகுதி மி.கி.)
கல்சியம் – 72.00 – 23.00
பொட்டாசியம் – 500.00 – 171.00
சோடியம் – 40.00 – 2.40
இரும்பு – 1.70 – 2.00
செப்பு – 0.18 – 0.19
மங்கனீசு – 0.32 – 0.08
துத்தநாகம் – 2.82 – 0.46
பொஸ்பரசு – 0.46 – 38.00
உயிர்ச்சத்து C – 290.00 – 96.00
பீற்ராகரோட்டீன் – 0.01 – 126.00

மருத்துவகுணங்கள்
 
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
மருந்தாய்வாளர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர்.நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது. 
 
இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப் புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் இழையங்களின் அழிவைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர்.கார்பன் டெட்ரா குளோரைடினாலும், பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது. இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை நுளம்புகளை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர் 
 
செய்முறை
 
துவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் – கால் தேக்கரண்டி, பூண்டு – 1 பல், தக்காளி –2, சிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் அதலைக்காய் கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் பெருஞ்சீரகம், கறுவாப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும். 
 
வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும். 
 
source: http://www.penmai.com/forums/healthy-nutritive-foods/86765-medicinal-benefits-vegetables-6.html#ixzz3wCIe8joQ

உளுந்தங்கஞ்சி

சுருங்காத தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். .

இதன் பலன்கள்:

முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.



தேவையான பொருட்கள்
:

உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் ஒரு மூடி

செய்முறை:

உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.


Source:  https://web.facebook.com/arulmozhi.chelliah