Tuesday, December 27, 2016

கொசுவை விரட்ட,கொசுவை ஒழிக்க


கொசுவ விரட்ட! – கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி!
இயற்கை கொசு விரட்டி! mosquito control! இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட!
 
ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும். ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!
தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!
 
கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள்.  வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? தெரியுமா உங்களுக்கு!
அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!

நொச்சி இலை மிகச் சிறந்த கொசுவிரட்டி. பேய்துளசி, காட்டுத்துளசி ஆகியவையும் கொசுக்களை அப்புறப்படுத்த உதவும். இவற்றைத் தூளாக்கி, மாலைப் பொழுதில் சாம்பிராணி புகைபோடுவதுபோல தீயிலிட்டு வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பின்னர் பூண்டு எண்ணெய், நீரைச் சேர்த்து வீட்டின் ஜன்னல்களில் தடவி, கதவைப் பூட்டிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது.இதேபோல புதினா, கேந்தி ஆகிய செடிகளைத் தொட்டியில் வளர்த்து அவற்றை மாலை நேரங்களில் ஜன்னல்களின் அருகே வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது. அழகுச் செடிகளாகக் கருதப்படும் ஏஜ்ரேடம், ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா உள்ளிட்டவை மட்டுமன்றி எளிதாகக் கிடைக்கும் வேப்பிலையும்சிறந்த கொசுவிரட்டி. மேலும் சில கொசுக்களை விரட்டும் செடிகள் கீழே

ஏஜ்ரேடம் (Ageratum)

வெள்ளை நிறமும் ரோஜா நிறமும் கலந்து கவர்ச்சியாக காட்சி தரும் இந்த பூச்செடி உண்மையில் காக்கா வலிப்புக்கும், காயங்களுக்கும் அருமருந்து. வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்கள், கொசு விரட்டிகளை உற்பத்தி செய்பவர்கள் அதற்காக இதன் எசென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சில வகையான கொசுவத்திகள் எரியும்போது சிலருக்கு தோலில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படுகிறது.

யூகிலிப்டஸ் (Eucalyptus)

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

மாரிகோல்ட் (Marigold)

மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

புதினா (Mint)

டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல்கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

ரோஸ்மேரி (Rosemary)

இது ஒரு பசுமை மாறாத செடி. நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயையும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயையும் கலந்து அந்தக் கலவையை உடலில் தேய்த்தால் கொசு நெருங்காது. இந்தக் கலவையை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதாக வளரக்கூடிய இயற்கைச் செடி.

சிட்ரோநெல்லா (Citronella – Lemongrass)

சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப் பிரபலமான ஓர் இயற்கை பூச்சி விரட்டி. இதன் சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லாவைப் பயன்படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

பூண்டு (Garlic)

மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களைகொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

கொசுக்களை விரட்டும் செடிகள்!
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? இதோ கொசுவை விரட்ட எளிய வழி
கொசு ஓரு பிரச்சனையா? உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எழுமிச்சை பழம் எடுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். இப்பொழுது சதை பகுதியில் ஆங்காங்கே கிராம்பை சொருகுங்கள். இதை அப்படியே உங்கள் ரூமில் வைங்கள். இவைகளில் இருந்து வரும் வாசனை கொசுவை விரட்டோ விரட்டு என்று விரட்டிவிடும்.

கொசுவை ஓட ஓட விரட்டணுமா?

அப்படி என்றால் நீங்கள் வேப்ப மரத்து இலைகளை சுடு தணலில் வாட்டுங்கள். அதிலிருந்து வரக்கூடிய புகை கொசு கூட்டங்களை ஓட ஓட விரட்டும்

வடை போண்டா பஜ்ஜி செய்து சாப்பிடக்கூடிய அசோலா பாசியை வீட்டில் பின்னாடி வளர்த்து வந்தால் உங்கள் வீட்டு பக்கம்கொசு எட்டிகூட பார்க்காது.

டெங்கு கொசுவை ஒழிக்க எளிய வழி
 
டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க எளிய வழி!

2 லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். அப்புறம் கீழ் பாதியை எடுத்துக்கொண்டு அதில் அரைப்பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றுங்கள். அதில் முக்கால் கப் பிரவுன் சுகர் என்று சொல்லக்கூடிய பழுப்பு நிற கரும்பு சர்க்கைரையையும் ஒரு டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்டையும் சேர்த்து கலக்கவும். ( சீனி கூட பயன்படுத்தலாம்)
இப்பொழுது கீழ்பகுதி பாட்டிலின் மீது பாட்டிலின் மேல் பகுதியை தலைகீழாக வைக்கவும் (புணல் போல வைக்கவும்). இப்பொழுது இந்த பாட்டிலை சுற்றி கருப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும். அப்புறம் இந்த பாட்டிலை நமது ரூமில் ஒரு மூலையில் வைக்கவும். இந்த பாட்டிலிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளி வர ஆரம்பிக்கும். கொசுக்கள் எல்லாம் அங்க படை எடுக்கும். அந்த கரைசலில் கொசுக்கள் எல்லாம் ஒட்டிக்கொள்ளும். அவைகளால் இனி வெளியே வரமுடியமல் போய் அங்கேயே சமாதி அடைந்துவிடும்.


கொசுக்களைக் கலங்கடிக்கும் கற்பூர வில்லை!

கற்பூரம்… ஒரு கண்கண்ட கிருமி நாசினி. வீடுகளில் தினமும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை கொளுத்தி ஆரத்தி எடுப்போம். இதைச் செய்யும்போது அறையில் உள்ள காற்றின் மாசுக்கள், பேக்டீரியா, வைரஸ், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி அடிக்கின்றன கற்பூரப் புகையும் மணமும். சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக்கும் சக்தி கற்பூரத்துக்கு உண்டு. நிரூபிக்கப்பட்ட பல மருத்துவ குணங்கள் இதில்
அடங்கியிருக்கின்றன. மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு கற்பூரத் தைலம் கண்கண்ட மருந்து. பல வலி நிவாரண மசாஜ் க்ரீம்களுக்கு கற்பூரம் ஒரு இன்றியமையாத பொருள்.
நம்மில் பலருக்கு கற்பூரம் ஒரு சிறந்த கொசு நிவாரணி என்கிற உண்மையே தெரியாது. பக்க விளைவுகள் இல்லாத, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு அரு மருந்து. இதற்காக கற்பூரத்தை நாள் முழுவதும் எரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை .

கொசுக்களை ஒழிக்க சுலபமான மூன்று வழிகள்
1. கொசுவர்த்தி பேடில் வழக்கமாக வைக்கும் நீல நிற வில்லைக்கு பதில் கற்பூரத்தை தினமும் ஒரு மணி நேரம் – காலையிலும் மாலையிலும் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. இரண்டு வில்லை கற்பூரத்தை அறையின் மூலை முடுக்குகளில் – எங்கு கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ – அங்கு வைத்து விடவும். அந்த வில்லைகள் தாமாகக் கரையும். காற்றும் சுத்தமாகும். கொசுவும் இருக்காது.
3. இரவில் படுக்கை அறையில் ஒரு வாய் அகன்ற கப்பில் தண்ணீருடன் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு ஒரு மூலையில் வைத்து விடவும். கற்பூரம் தண்ணீரில் கரைந்து காற்றுடன் கலக்கும். கற்பூர மணத்துடன் கொசு இல்லா நிலையை அனுபவிக்கலாம்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி?
வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் மண்ணெனண்ணைய் தெளித்தால் கொசு முட்டை அழிவதோடு கொசுக்கள் முட்டையிடுவதும் நின்று போகுமாம். இதனால் கொசு உற்பத்தியே இல்லாமல் போகுமாம்!
வீட்டை சுற்றிலும் நீங்கள் துளசி, திருநீற்று பச்சிலை செடிகளை வளர்த்து வந்தால் கொசுக்கள் வருவது குறைந்து போகுமாம்.
வீட்டை சுற்றி இருக்கும் தண்ணீரில் லிட்டருக்கு ஒரு விதை வீதம் தேற்றான் கொட்டையை அரைத்து கலக்கலாம்! மஞ்சள் கிழங்கையும் அரைத்து தேங்கியிருக்கும் தண்ணீரில் கரைக்கலாம்

கொசுவை விரட்ட மூன்று வழிகள்! முத்தான வழிகள்! எளிய வழிகள்! அனைவருக்கும் ஏற்ற எளிய வழிகள்!
வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்…கொசு போயே போச்சே!

கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.
ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!
ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள்.  பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள். பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.  வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது


காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !
தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ : விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரிக்கலாம்!
இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது.
விற்பனை வாய்ப்பு
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.
வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.
வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.

உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

கொசு  விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.
பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான்கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப்
     கொசுக்களை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல நடவடிக்களை எடுத்தாலும் நாம் நம்மை சுற்றி உள்ளஇடத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ளவேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு பிறகு கொஞ்சம் மக்களிடையே விழிப்புணர்வு வந்து இருப்பதாக தெரிகிறது . வாளி , வர்ணம் இருந்த பாத்திரங்கள் , தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்த முடியவிட்டாலும் நீர் மீது டீசல் ,மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ஏதோவொன்று சிறிது தெளிக்கலாம் .இதுவும் அதிக செலவு என்று எண்ணுபவர்கள் சோப்பு தண்ணீரை பயன்படுத்தலாம் .கிணறு போன்ற நீர் நிலைகளில் என்ன செய்யலாம் ? அதற்கு  இயற்கை தந்த தீர்வு மீன் வளர்ப்பது.
வீட்டில் பூதொட்டிகள் இருக்கும் நீரை தினசரி மாற்ற வேண்டும் .இன்னமும் சுத்தமாக வைத்து கொள்ள விருபும்வோர் பூசெடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கலாம் . வசதியுள்ளவர்கள் சிறிய அளவில் வீட்டுக்காக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் உள்ளது.கொசு மருந்து திரவ கரைசலையும் ,வாயுவையும்  வாங்கி அதற்கான இயந்திரத்தில் இணைத்து  வீட்டை சுற்றிலும் பயன்படுத்தலாம் .இதையும் இயற்கையான முறையில் வேப்பபுண்ணாக்கையும்,சுண்ணாம்புக் கரைசலை பயன்படுத்தலாம் .மரக்கிளையில் இருக்கும்பொந்துகளில் மண் அல்லது சிமெண்ட் பூசி தண்ணீர் தேங்காதகுறைந்த விலையில் வங்கி அடமான சொத்துக்கள் வாங்க வேண்டுமாவாறு பார்த்து கொள்ளலாம் .
சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் வந்து வருடந்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மழைக் காலங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அதற்கு தனியாக ஒரு குழு உண்டு , இவர்கள் கொசுக்களின்  லார்வாவை  பிடித்து விட்டால் முதல் தடவை  20,000($500)ரூபாய்யும்,கட்டிட கட்டுமான தளமாக இருந்தால்  40,000($1000)ரூபாய்யும்,அடுத்தடுத்த முறைகளில் அபராதம் இரட்டிப்பாக உயர்ந்து கொண்டே போகும்.இதனால் தான் அங்கு மக்கள் சுகாதாரமாக வாழ்கிறார்கள். நல்ல வேளையாக இந்தியாவில் மழைக்காலம் மூன்று மாதம் மட்டுமே

Source:  https://redhilsrealestateagency.wordpress.com/