Sunday, March 5, 2017

எளிய யோகாசனங்கள்





யோகாசனம் எப்பொழுது செய்ய வேண்டும்?


அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும், மாலையில் சூரியன் மறையும் நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம். 

காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும். காலையில் உடல் பிடிப்பாக இருக்கும். ஆனால் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மாலை உடல் தளர்வாவும் மனம் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கும். எனவே யோகத்தினை தினமும் காலையிலும், மாலையிலும் செய்வது சிறந்தது. இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கிறது.

குளித்த பிறகு யோகாசன பயிற்சி செய்யலாம். குளியல் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. இல்லையென்றால் ஒருவர் யோகப்பயிற்சியை செய்து முடித்த 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.


எளிய ஆசனங்கள்

  1. வஜ்ராசனம் - 3 நிமிடங்கள்
  2. புஜங்காசனம் - 3 முறை
  3. சலபாசனம் - 3 முறை
  4. தனுராசனம் - 3 முறை
  5. பத்மாசனம் - 3 நிமிடங்கள் 
  6. சவாசனம் -  2 நிமிடங்கள்