Sunday, January 3, 2016

வாழைப்பழம்

எப்பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களாக இயற்கை மனித குலத்துக்கு அளித்துள்ள பழம் வாழைப்பழம், முக்கனிகளில் இதுவும் ஒன்று.
பத்துக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் உண்டு. ஆனாலும் எல்லாவற்றிற்கும்
கூறப்பட்டுள்ள பொதுவான குணம் ஒன்று எனினும் பல சிறப்புகளும் உண்டு. ருசியில் வேறுபாடு உண்டு. வாழைப் பழங்களில் செவ்வாழைக்கு மட்டுமே தனித்த பயன் உண்டு.


நமது இயற்கை விஞ்ஞானிகளான சித்தர்கள் மருத்துவ பயன் கருதி வீரியமூட்டி செவ்வாழயாக்கி இருக்கிறார்கள்.

பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கு வாழைப்பழங்கள் நிவாரணம் தருகின்றன. வைட்டமின் ஏ, பி, பி- 2, சி, உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது.


அடுக்கு வாழைப்பழம்
அக்கினி மானத்தை உண்டாக்கும். பித்தம் மிகுவதையும், மலம் தீய்வதையும்
வெளியாக்கும், தேகவனப்பை வளப்படுத்தும். 

பூவன் வாழைப் பழம்
உடலுக்கு வலுவுண்டாக்கும். இரத்த விருத்தி அதிகமாகும். இரவு உணவிற்குப் பிறகு ஒரு பழம் வீதம் தினமும் உட்கொள்ளலாம். செரிமானம் சுகமாகும்.

பச்சை வாழைப் பழம்

‘பச்சை நாடன்’ என்று இதற்கு வேறு பெயரும் உண்டு. உடல் சூட்டையும்,
பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.

பேயன் வாழைப் பழம்
பெரியவர்களுக்கு பித்தமும் உட்சூடும் அகலும், வாத ஆதிக்கம் குறையும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் கனிச் சூட்டிற்கு இது நல்ல மருந்தாகும். பழத்தை ஆமணக்கு எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்த நல்ல பயன் தரும்.

ரஸ்தாளி வாழைப் பழம்
அக்கினி மாந்தம் உண்டாகும். வாதத்தை உபரியாக்கும்.
 
மலை வாழைப் பழம்
மிகுந்த ருசியுடையது. இரத்த சோகை நிற்கும். உட்சூட்டை அதிகமாக்கும். இரத்த விருத்தியாகும், மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும்.
மலைப் பகுதியில் பயிராவதால் இதற்கு மலை வாழை என்று பெயர் உண்டாயிற்று.

திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சில மலையில் பயிராகும் மலைவாழைப் பழமே மிகுந்த சுவையுடன் கூடிய பயன் தரவல்லது.


செவ்வாழைப் பழம்
எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பலப்படும்.  நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.

பொதிகை மலைச்சாரல் சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.

வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை. சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம். எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண மருத்துவப் பயன் மிக்கது.

No comments:

Post a Comment