Sunday, January 3, 2016

கருணைக் கிழங்கு

கிழங்குகளில் உடலிற்கு நன்மை பயக்கும் கிழங்கு என்பதால் கருணைமிகு இக்கிழங்கை கருணைக் கிழங்கு என நம் தமிழச்சித்தர்கள் அழைத்தனர்.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு,
 குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு"

அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.

தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும். 
தேவையானப்பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு பற்கள் - 10
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 முதல் 3 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கருணைக்கிழங்கை கழுவி, தோலை சீவி விட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் தோலை உரித்து வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில், கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
 

No comments:

Post a Comment